இடுகைகள்

ரசம்

படம்
ரசம்  தொண்ணூறுகளின் இறுதியிலும் இரண்டாயிரத்தின் தொடக்கத்திலும் இப்போது இருப்பதைப்போன்ற வசதிகள் ஷார்ஜாவில் இல்லை. கைப்பேசிகளோ இணைய தொடர்புகளோ மிகவும் அரிது. அப்போதெல்லாம் எட்டிசலாட்டின் தொலைபேசிக் கார்டுகள்தான் ஊரில் இருக்கும் குடும்பத்தாரைத் தொடர்புகொள்ள ஒரே வழி. அதைக் கொண்டுதான் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் வெள்ளி வீட்டிற்குப் பேசுவது. இம்மாதம் பேசும்போது மெதுவாய் என் திருமணத்தைப் பற்றி அம்மாவிடம் பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது அம்மாவே அதுபற்றி கடிதம் எழுதியிருந்தார் (அது இன்னமும் கடிதம் எழுதும் காலமாக இருந்தது). நன்றாக சமைக்கத் தெரிந்த பெண்ணாய் பாருங்கள் என்பது மட்டும் இந்த விஷயத்துக்கு என்னுடைய பங்களிப்பாய் இருந்தது. பேசும்போது எனக்கு அடுத்த வருடாந்திர விடுமுறை எப்போது எத்தனை நாள்கள் என்ற விசாரிப்பு இருந்தது. வரும் ஜூன் மாதத்தில் இரண்டு வாரங்கள் வருவேன் என்று தெரிவித்தேன். அதற்குள் எப்படியும் ஏற்பாடுகள் செய்வதாய் உறுதியளித்தனர் என் பெற்றோர். மற்ற சம்பிரதாயப் பேச்சுக்கள் முடிந்து தொலைபேசியிலிருந்து என் எட்டிசலாட் கார்டை உருவிக்கொண்டு திரும்பினேன். சாலையைக் கடந்து என் அற...

விற்ற நாள் முதல்

படம்
விற்ற நாள் முதல் ஒரு ஜனவரியின் பனிக்காலைப் பொழுதில் தான் என்னை நான் விற்றேன். செப்டம்பர் பதினொன்றுக்கு முன், பின் என வரலாற்றை இரண்டாகப் பிரித்தது போல், என்னை விற்பதற்கு முன், பின் என என் வாழ்வும் இரண்டாகப் பிரிந்து போனது. அன்று விமானதளத்தை பனிமூட்டம் மூடியிருந்தது. கருஞ்சாம்பல் ரன்வேயின் பனிப்போர்வையை இளங்காலை சூரியனின் ஆரஞ்சு கதிர்கள் மெள்ள விலக்கிக்கொண்டிருந்தன. இந்தப் பொழுது எனக்கு மிகவும் உகந்த பொழுது. பூமியில் இருப்பதை விட ஆகாயத்தில் இந்தக் கணங்கள் இன்னும் ரம்மியமாய் இருக்கும். ஹாங்கரில் நின்றிருக்கும் இரண்டு செஸ்னா விமானங்களையும் ஏக்கத்துடன் பார்த்தேன். நினைத்த பொழுதில் அவைகளை எடுத்துச் செல்ல எனக்கு உரிமையில்லை. ஒவ்வொரு முறையும் விமானத்தை எடுப்பதற்கு ஆயிரம் வரையறைகள் உண்டு. வரையறைகள் இன்றி, கார் ஓட்டுவதைப் போல் விமானம் ஓட்ட, சொந்தமாக விமானம் வைத்திருக்க வேண்டும். என்னைப் போல் ஃப்ளையிங் க்ளப்பில் விமானம் ஓட்டப் பயிற்சி பெறுபவனுக்கு அது கனவில் கூட சாத்தியமில்லை. “குட் மார்னிங், பரம்”. என் சூப்பர்வைசர் ரங்கநாதனின் குரல் கேட்டுத் திரும்பினேன். “குட் மார்னிங், சார்”. “க்ரேட் மார்னிங் ...

ஓவியம்

படம்
  ஓவியம்   " இங்க பெயிண்டர் ஆறுமுகம் … ?" " என்ன வேணும் சொல்லுங்க ". " இல்ல , பெயிண்டரைப் பாக்கணும் ". " நாந்தான் … சொல்லுங்க ". இப்போது ஊன்றிப் பார்த்தான் அவரை . வயது நாற்பதுக்கு மேலோ , ஐம்பதுக்கு மேலோ … தெரியவில்லை . பரட்டையாய்க் கலைந்து ஆங்காங்கே வெள்ளைத் துகள் அப்பியிருந்தத் தலையில் நரை தனியாய்த் தெரிந்தது . பெயிண்டர்களுக்கே உரித்தான ஒரு பழைய பெயிண்ட் கறைகள் அப்பிய டி - ஷர்ட்டும் லுங்கியும் அணிந்திருந்த அந்த ஒடிசலான உருவத்தைப் பார்த்ததில் அவனுக்கு சற்று சந்தேகம் வந்தது , அவனுக்கு வேண்டிய காரியத்தை முடித்துக் கொடுப்பாரா எதிரில் இருப்பவர் என்று . " படம் … " என்று இழுத்தான் . " படம் வரையணுமா ?" என்று கேட்டார் பெயிண்டர் . ஆமென்று தலையசைத்தான் . " இந்த வயசுலயேவா ?"   அந்தக் கேள்விக்கு பதில் ஏதும் அவனிடம் இல்லாததால் அமைதியாய் இருந்தான் . " மத்ததெல்லாம் முயற்சி பண்ணிட்டியா ?" மறுபடியும் ஆமென்று தலையசைத்தான் . " குட...