இடுகைகள்

Gene Kelly லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆடலரசன் GENE KELLY

படம்
 அலுத்து சலித்த ஒரு நாளின் முடிவில், அனைத்து வேலைகளையும் முடித்த நேரத்தில், சிறு எரிச்சலும் பெரும் ஆயாசமும் உடலையும் மனதையும் அழுத்தும் வேளையில், கியாரண்டியாக நம்மைப் புன்னகைக்க வைக்க ஒருவர் இருக்கிறார் – GENE KELLY. 1940களும் 1950களும் ஹாலிவுட்டில் 'ம்யூஸிக்கல்' எனும் வகைத் திரைப்படங்கள் கொடி கட்டிப் பறந்த காலம். இந்தக் காலத்தில் அந்த வகைத் திரைப்படங்களின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் GENE KELLY என்று அறியப்பட்ட EUGENE CURRAN KELLY. Tap dance-ஐயும் Classic Ballet-வையும் இணைத்து இவர் உருவாக்கிய நடன அமைப்புகளும் (choreography), ஆடிய நடனங்களும் அவருடைய திரைப்படங்களை வெற்றி பெறச் செய்ததது மட்டுமல்லாமல், ஆண் நடனக் கலைஞர்களின் மீது மக்கள் கொண்டிருந்த பார்வையையும் மாற்றியது. ‘நடனம் என்பது பொதுவாக ball room-களிலும் கோட்டு சூட்டுகளிலும் சீமான்களாலும் சீமாட்டிகளாலும் ஆடப்படுவது’ என்ற எண்ணம் பரவலாக அந்தக் காலகட்டத்தில் இருந்திருக்கலாமோ என்ற யூகத்தை, GENE KELLY-ன் நடனங்கள் உடைத்தெறிய முக்கிய காரணியாக இருந்திருக்கலாம் என்பது அவருடைய நடனங்களைப் பார்த்தால் புரியலாம். ஒரு சாமான்யனின் உடையில...