இடுகைகள்

OTT Series லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அனிமட்ரானிக்ஸ் - 'Spy In The Wild'

படம்
  Peter Jackson-ன் King Kong படம் பார்த்தவர்களுக்கு ‘அனிமட்ரானிக்ஸ்’ என்ற சொல்லுக்கான அர்த்தத்தை விளக்க வேண்டிய அவசியம் இருக்காது அநேகமாய். King Kong-ன் பிரமாண்டம் மட்டுமல்லாது நுட்பமான அதன் முகபாவங்களும் பார்த்தவர்களை வியப்பில் ஆழ்த்தி, சற்று நேரத்திலேயே அது ஒரு பின்னிருந்து இயக்கப்படும் இயந்திரம் என்பதை மறக்கச்செய்யும் தொழில்நுட்பமாய் அன்று அது அமைந்திருந்தது. பார்ப்பது திரைப்படம், நடிப்பது நடிகர்கள், இயங்குவது இயந்திரம் என்ற உண்மைகளைத் தாண்டி, King Kong-ன் கடைசி மூச்சு பிரியும் போது கண்களில் கண்ணீர் வரவில்லையென்றாலும் மனம் சற்றே நெகிழும் அந்தத் தருணம் தான் அன்றைய அந்த அனிமட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தின் வெற்றி. அந்தத் திரைப்படம் வெளிவந்து பதினாறு வருடங்கள் ஆகின்றன. இந்தப் பதினாறு வருடங்களின் தொழில்நுட்ப வளர்ச்சி, திரைப்படத்தில் ஒரு இயந்திர உருவத்தின் புனையப்பட்ட இறப்பிற்குப் பார்வையாளர்கள் மனம் வருந்தியத்திலிருந்து, தம்முடைய கூட்டத்தில் இருந்த ( ஊடுருவிய! ) குட்டிக் குரங்கு ( அனிமட்ரானிக்ஸ் ரோபாட்! ) ஒன்றின் இறப்பிற்கு ( பழுதாகி இயங்காமல் போன! ) கூட்டம் கூடி துக்கம் அனுஷ்டிக்கும் ...

Tales from the Loop (பொதிந்திருக்கும் பவளங்கள்)

படம்
  TALES FROM THE LOOP புசுபுசுவென்று ஒரு பூனைக்குட்டி ஆழமாய் ஒரு தூக்கம் போட்டு, நீட்டி நிமிர்ந்து சோம்பல் முறித்து, பாலுக்காக நம் காலைச் சுற்றி, அதைக் கொடுக்கும் வரை நம்மை வேறு வேலை செய்ய விடாது, கொடுத்த பின்னும் நம் கவனம் நாடி, சோபாவில் அமர்வது போதாதென்று, நம் மடியில் வந்து சுருண்டு கொண்டு கதகதவென்ற ஒரு பஞ்சுப் பந்தாவது போல் தான் அமேசான் ப்ரைமின் “TALES FROM THE LOOP” தொடர். மெல்லிய ஒரு அழகுடன், ஆர்ப்பாட்டங்கள் எதுவுமின்றி ஆரம்பிக்கும் இந்தத் தொடர், முடிவில் நினைவுகள் மறுபடி மறுபடித் தேடும் வெதுவெதுப்பானப் பூனைப் பொதியாகிறது. நாவல்களிலிருந்து, சிறுகதைகளிலிருந்து, டைரிக் குறிப்புகளிலிருந்து, ஏன், கவிதைகளிலிருந்தும் கூடத் திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் எழுதப்படுவதும் படமாக்கப்படுவதும் வழக்கமான ஒன்று தான். ஆனால் ஓவியங்களிலிருந்து ஒரு தொலைக்காட்சித் தொடர், கற்பனையில் புனையப்பட்டுக் காட்சிப்படுத்தப்படுவது  “TALES FROM THE LOOP”ல் தான் முதல் முறையாக இருக்க வேண்டும். அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் மெர்சர் என்ற ஊரில் "லூப்" என்று செல்லமாக அழைக்கப்படும் "Mercer Cent...