இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புத்தகம்

படம்
       ஏதோ ஒரு வருடத்தின் ஏதோ ஓர் ஊரின் ஏதோ ஒரு புத்தகக் கண்காட்சியில் தான் அந்தப் புத்தகத்தைப் பார்த்தேன் . இரண்டு பெரும் பதிப்பாளர்களின் இரண்டு பெருத்த ஸ்டால்களுக்கு இடையே ,  ஒரு கொழுத்த புத்தகத்தின் நடுவே சொருகப்பட்ட புக்மார்க்கைப் போல் , திணறி நின்றிருந்தது அந்த ஸ்டால் . உள்ளே இடம் கொள்ளாமல் வெளியே பிதுக்கப்பட்டிருந்த புத்தகங்கள் இரு பக்கத்து ஸ்டால்களிலும் இறைந்து கிடைக்க , போடப்பட்டிருந்த ஒற்றை மேசையின் மீது இருந்த ஒரே ஒரு புத்தகத்தைத் தவிர வேறு எதுவும் இன்றிக் காலியாயிருந்தது அந்த ஸ்டால் . ஒற்றைப் புத்தகத்தின் ஒற்றைப் பிரதிக்கு ஒரு ஸ்டாலா ? ஆச்சர்யமா ஆவலா என்று அறிவதற்குள் கைகள் அந்தப் புத்தகத்தை எடுத்திருந்தன . வெள்ளை அட்டையில் ' புத்தகம் ' என்ற கருப்பு எழுத்துக்களைத் தவிர வேறு எதுவும் இல்லை . எழுதியவரின் பெயரோ , பதிப்பகத்தின் முகவரியோ எதுவும் இல்லை . பின் அட்டையைத் திருப்பிப் பார்த்ததில் நூற்குறிப்போ ஆசிரியரைப் பற்றியோ எதுவும் இல்லாமல் வெறுமையான வெள்ளையாயிருந்தது...