“வீடு தைக்கிறீங்களா, வீடு?” (வீடு series – III)
நீங்கள் எதையும் தவறாக வாசித்துவிடவில்லை. 'வீடு தைக்கிறீங்களா?' என்று சரியாகத்தான் வாசித்திருக்கிறீர்கள். செங்கல், மணல், சிமிண்ட், கல், கான்க்ரீட், மண், மரம், உலோகம் என்ற மூலப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் வீட்டைக் 'கட்டலாம்' . துணியைக் கொண்டு உருவாக்கப்படும் வீட்டை 'தைக்க' த் தானே வேண்டும்? அப்படித் 'தைக்கப்படும்' வீடுகளுக்குப் பெயர் 'யர்ட்' (yurt) அல்லது 'கெர்' (ger) . ருஷ்யப் பெயரான 'யர்ட்' -ம் மங்கோலியப் பெயரான 'கெர்'- ம் குறிப்பது வேறெதுவுமில்லை, கூடாரத்தைத் தான். ' அடச்சே! இதுக்குத் தானா இந்தப் பாடு? கூடாரத்தைப் போய் வீடுன்னு எப்படி சொல்ல முடியும்?' என்று நினைத்தால், தொடர்ந்து வாசியுங்கள். ஈரானின் மலைப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பித்தளைக் கிண்ணம் ஒன்றில் இந்த யர்ட் -ன் படம் இருந்துள்ளது. ‘அதனாலென்ன?’ என்று கேட்கிறீர்களா? அந்தக் கிண்ணம் செய்யப்பட்டதாகக் கணிக்கப்பட்டது 600 கிமு ஆண்டு. ஹெரோடோட்டஸ் (Herodotus) என்னும் கிரேக்க வரலாற்றாளர் 440 கிமு ஆண்டிலேயே சில குறிப்பிட்ட இனத்தவர்கள் இந்த வகை வசிப...