இடுகைகள்

மார்ச், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீள் வட்ட சுற்றுப் பாதை

படம்
 " இது என்னவென்றுத் தெரியுமா ?" மேஜை மேல் இருந்த அந்த பளபளக்கும் பொருளைப் பார்த்துவிட்டுத் தன் நண்பனைக் கேட்டான் ஜே என்று அழைக்கப்படும் Jeremiah. " வாங்கும் போது தெரியாது . இப்போதுத் தெரியும் , கூகுளின் தயவால் , ஆரரி [1] ( Orrery)", என்றான் ரஃபிக் . " என்னவென்றேத் தெரியாமல் எப்படி வாங்கினாய் ?" " அதுதான் எனக்கும் தெரியவில்லை . உனக்குத் தெரியுமல்லவா - விடுமுறை நாட்களில் நான் கால் போன போக்கில் ஊருக்குள் நடந்து வருவேன் என்று ? ஒரு புதிய இடத்தைப் பழகிக் கொள்ள அதைவிட சிறந்த வழியில்லை . அப்படித்தான் இன்று காலையும் கிளம்பினேன் . கால்கள் என்னை 'Grand Manor' என்னும் மாளிகை இருக்கும் தெருவிற்கு அழைத்துச் சென்றன . வாசலில் 'Estate Sale' என்று ஒரு போர்டு இருந்தது . நிறைய பேர் உள்ளே சென்றுகொண்டிருந்தார்கள் . அவர்களில் ஒருவரிடம் விசாரித்தேன் , 'Estate Sale' என்றால் என்னவென்று . அவர்தான் சொன்னார் அது அந்த வீட்டின் பொருட்களை விற்பது என்று . இதுவரை இப்படி ஒன்றைக் ...