அரை மணி நேரத்தில் மௌனமாய் பயணம் செய்து பேக்கர் தெருவிற்கு வந்தடைந்தோம். வழி நெடுகிலும் ஜேம்ஸ் ரைடர் எதுவும் பேசவில்லையென்றாலும் அவனின் வேகமான மூச்சும், பிசையும் கைகளும் அவனுள் இருந்த பதட்டத்தைப் பறைசாற்றின. "ஹா! இந்தக் குளிருக்கு இந்தக் கணப்பு நெருப்பு நிரம்பவே இதமாக இருக்கிறது. அந்த கூடைச் சேரில் உட்கார்ந்துகொள், ரைடர். உன்னைப் பார்த்தால் குளிரில் விறைத்தவன் போல் தெரிகிறது. உனக்கு வேண்டியதை சொல்லும் முன் என் காலணிகளை நான் அணிந்து கொள்கிறேன். ஹம்! இப்போது சொல், உனக்குத் தேவை அந்த வாத்துக்கள் என்ன ஆயின என்ற தகவல், அல்லவா?" "ஆமாம், சார்!" "அதிலும் குறிப்பாக வாலின் குறுக்கே கறுப்புப் பட்டை கொண்ட அந்த வெள்ளை வாத்து, என்ன ஆயிற்று என்று தெரிந்தால் போதும் உனக்கு, அப்படித்தானே?" "சார், அந்த வாத்து எங்கே சென்றது என்று சொல்ல முடியுமா?" என்று கேட்ட ரைடரின் குரல் நடுங்கியது. "இங்கே". "இங்கேயா?" "ஆம், இங்கே தான். என்ன ஓர் அற்புதமான பறவை அது! அந்த வாத்து இறந்த பின் ஒரு முட்டை இட்டது - பளபளத்து ஜொலிக்கும் ஒரு நீல முட்டை. அந்த அதிசய ம...
கருத்துகள்
கருத்துரையிடுக