"காற்று வாங்கப் போனேன்; ஒரு கனவு வாங்கி வந்தேன்"... என்ற கதையாகக் கடற்கரையில் ஜாகிங் போன போது தோன்றிய ஒரு கதைக் கருவிற்காகக் காலையில் ஐந்து மணிக்குக் குடும்பம் மொத்தமும் காமிரா சகிதமாகக் கடற்கரை சென்று அங்கிருப்பவற்றையும், அங்கு வரும் பறவைகளையும் காட்சிகளையும் படம் பிடித்து, அந்தப் பறவைகளையும் காட்சிகளையும் தத்ரூபமாகக் கண் முன் நிறுத்த அப்போது உபயோகத்தில் இருந்த அனிமேஷன் டெக்னீக்குகள் ஈடுகொடுக்க முடியாததால் புதிய அனிமேஷன் உத்திகளைக் கண்டுபிடித்து, மூன்று வருடங்கள் உழைத்து எடுத்த ஆறு நிமிட அனிமேஷன் காவியம்(!) Pixar -ன் 'Piper'. இன்று வரை Pixar எத்தனையோ அனிமேஷன்களை உருவாக்கியிருந்தாலும், மனதிற்கு மிக நெருக்கமான அனிமேஷன், 2017 -ல் 'Best Animated Short Subject' க்கான Annie Awards வென்ற 'Piper' தான். கடற்கரையில் வாழும் சாண்ட்பைப்பர் இன வகையைச் சேர்ந்தக் குஞ்சு ஒன்று அம்மாவிடம் இருந்து உணவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூழலில், தன் உணவைத் தானேத் தேடிக்கொள்ளும் வித்தையைக் கற்கும் பொருட்டு தாய்ப் பறவை குஞ்சு பைப்பரைக் கடற்கரையை நோக்கி செலுத்துகிறது. வ...
அரை மணி நேரத்தில் மௌனமாய் பயணம் செய்து பேக்கர் தெருவிற்கு வந்தடைந்தோம். வழி நெடுகிலும் ஜேம்ஸ் ரைடர் எதுவும் பேசவில்லையென்றாலும் அவனின் வேகமான மூச்சும், பிசையும் கைகளும் அவனுள் இருந்த பதட்டத்தைப் பறைசாற்றின. "ஹா! இந்தக் குளிருக்கு இந்தக் கணப்பு நெருப்பு நிரம்பவே இதமாக இருக்கிறது. அந்த கூடைச் சேரில் உட்கார்ந்துகொள், ரைடர். உன்னைப் பார்த்தால் குளிரில் விறைத்தவன் போல் தெரிகிறது. உனக்கு வேண்டியதை சொல்லும் முன் என் காலணிகளை நான் அணிந்து கொள்கிறேன். ஹம்! இப்போது சொல், உனக்குத் தேவை அந்த வாத்துக்கள் என்ன ஆயின என்ற தகவல், அல்லவா?" "ஆமாம், சார்!" "அதிலும் குறிப்பாக வாலின் குறுக்கே கறுப்புப் பட்டை கொண்ட அந்த வெள்ளை வாத்து, என்ன ஆயிற்று என்று தெரிந்தால் போதும் உனக்கு, அப்படித்தானே?" "சார், அந்த வாத்து எங்கே சென்றது என்று சொல்ல முடியுமா?" என்று கேட்ட ரைடரின் குரல் நடுங்கியது. "இங்கே". "இங்கேயா?" "ஆம், இங்கே தான். என்ன ஓர் அற்புதமான பறவை அது! அந்த வாத்து இறந்த பின் ஒரு முட்டை இட்டது - பளபளத்து ஜொலிக்கும் ஒரு நீல முட்டை. அந்த அதிசய ம...
ஷெர்லக் ஹோம்ஸ் ஒரு நெடிய விசில் சத்தத்துடன் நிமிர்ந்து அமர்ந்தார். "ஓய், பீட்டர்சன்! உன் கையில் என்ன இருக்கிறதென்று தெரியுமா? பொக்கிஷமய்யா, பொக்கிஷம்!" என்றார் ஹோம்ஸ். "வைரமா, சார்? இல்லையென்றாலும் இது ஏதோ ஒரு விலையுயர்ந்த கல். கண்ணாடியை வெண்ணெய் போல் அறுக்கிறது", என்றார் பீட்டர்சன். "ஏதோ கல் இல்லை, பீட்டர்சன்! இது தான் அந்தக் கல்". "கவுன்ட்டஸ் மோர்சர் அவர்களின் நீல மாணிக்கம்?" என்றேன் நான் அதிர்ச்சியுடன். "அதே தான். அதன் அளவும் வடிவமும் எனக்கு மிகவும் பரிச்சயமானது. தினமும் அதைப் பற்றிய விளம்பரங்களை தி டைம்ஸ் நாளிதழில் பார்த்துக் கொண்டிருக்கிறேனே! இதைப் போன்ற இன்னொரு கல் உலகில் இல்லை. இதன் மதிப்பு என்னவென்று யூகிக்கத்தான் முடியும். இதற்கு அறிவிக்கப்பட்டிருக்கும் பரிசுத் தொகையான 1000 பவுண்டுகள் இதன் மதிப்பில் இருபதில் ஒரு பங்கு கூடக் கிடையாது". "ஆயிரம் பவுண்டுகளா? அடக்கடவுளே!" என்று அதிர்ச்சி தாங்காமல் அருகில் இருந்த நாற்காலியில் தொப்பென்று அமர்ந்து எங்கள் இருவரின் முகங்களையும் மாறி மாறிப் பார்த்தார் பீட்டர்சன். "அது ப...
கருத்துகள்
கருத்துரையிடுக