வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி (குறுநாவல்)
ஒரு துப்பறியும் ஏஜென்ஸியைத் துப்பறியும் கொஞ்சம் வித்தியாசமான துப்பறியும் குறுநாவல். "அது என்ன சார், 'வாத்துடு டிடெக்டிவ் ஏஜென்சி'? டிடெக்டிவ் ஏஜென்சிக்கு இப்பிடி ஒரு பேரு?" என்று கேட்பவர்களுக்கு சொல்லப்படும் கதை பதில். கொஞ்சம் கிறுக்குத்தனமான இந்தப் பெயருக்குப் பின்னால் இருக்கும் கதையை சொல்லாமல் பீஸை கொடுக்கமாட்டேன் என்று முக்கால்வாசி பீஸை கொடுக்காமல் போய்விட்ட கிளையண்ட்டிடம் இருந்து மிச்ச பீஸை வாங்குவதற்கான முயற்சி.
வாத்துடு டிடெக்ட்டிவ் ஏஜென்சி
ஒன்று
"அது என்ன சார்,
'வாத்துடு டிடெக்டிவ் ஏஜென்சி'?
டிடெக்டிவ் ஏஜென்சிக்கு இப்பிடி ஒரு பேரு?"
என்று கேட்பவர்களிடம் எல்லாம்,
"அது பெரிய கதை. இன்னொரு நாள் சொல்றேன்", என்பதோடு நிறுத்திக்கொள்வது இப்போதெல்லாம் போதமாட்டேன் என்கிறது. கடைசியாக வந்த கிளையண்ட்,
"அது என்ன பெரிய கதை?
சொல்லுங்க, கேப்போம்", என்று விடாப்பிடியாகக் கேட்க,
"நிஜமாவே பெரிய கதை,
சார். இன்னொரு நாள் சொல்றேன்", என்று சமாளிக்கப் பார்க்க,
அவரும் விடாக்கண்டனாக,
"என்னைக்குன்னு சொல்லுங்க,
அன்னைக்கு வந்து அந்தக் கதையைக் கேட்டுட்டு மிச்ச பீஸைத் தரேன்", என்று கால்வாசிக் காஸைக் கொடுத்துவிட்டு முக்கால்வாசி பீஸை அக்கவுண்ட் டிரான்ஸ்பர் செய்யாமலேப் போய்விட்டார். அவரிடம் சொன்ன வார்த்தையைக் காப்பதற்காகவும்,
அதைவிட முக்கியமாய்,
மிச்சமிருக்கும் முக்கால்வாசி பீஸை வசூல் செய்வதற்காகவும் (காசு முக்கியம்,
பாஸ்!) 'வாத்துடு டிடெக்டிவ் ஏஜென்சி'யின் பெயர்க்காரணம் இங்கே எல்லோரின் முன்னும் வைக்கப்படுகிறது. 'வாத்துடு டிடெக்டிவ் ஏஜென்சி'யின் தேவை இருப்பவர்கள் கூகிள் தேடலில் அட்ரஸ் தேடும் போது கூடவே இந்தக் கதையையும் கூகிள் இழுத்துப்போட்டுவிடும் என்பதால்,
'வாத்துடு டிடெக்டிவ் ஏஜென்சி'க்கு வருபவர்கள்,
வரவேண்டும் என்று நினைப்பவர்கள்,
வரவேண்டிய அவசியம் இல்லாதவர்கள்,
சும்மாவேனும் பொழுது போகாமல் கூகிளில் வலை வீசுபவர்கள் என்று எல்லோருக்குமாக சேர்த்து மொத்தமாய் இந்தக் கதையை சொல்லிவிடுகிறேன். இதன் பின்னும் 'வாத்துடு டிடெக்டிவ் ஏஜென்சி'யின் நாம விலாசம் கேட்பவர்களுக்கு இந்த புத்தகத்தின் லிங்க் அனுப்பிவைக்கப்படும்.
ஆரம்பிக்கலாங்களா…?
தொடரும்…
கருத்துகள்
கருத்துரையிடுக