"வீட்டுக்குள்ளே எப்படி குதிரை வந்தது?"

 

 கிளிட்... க்ளாட்... கிளிட்... க்ளாட்...

சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தார் வரவேற்பறையில் பேப்பர் வாசித்துக்கொண்டிருந்த பாட்டி.

"மல்லி...! வீட்டுக்குள்ளே எப்படி குதிரை வந்தது?"

"வாலை வீசிக்கிட்டு

 வாசல் வழியா

 வீட்டுக்குள்ளே குதிரை வந்தது, பாட்டி!" என்றாள் மல்லி.

 கிளிட்... க்ளாட்... கிளிட்... க்ளாட்...

சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான் படிக்கும் அறையில் அலமாரி அடுக்கிக்கொண்டிருந்த அண்ணன்.

"ஏய் மல்லி...! வீட்டுக்குள்ளே எப்படி குதிரை வந்தது?"

"வாலை வீசிக்கிட்டு

வாசல் வழியா

வரவேற்பறை வந்து

நாற்காலிய நொறுக்கி

வீட்டுக்குள்ளே குதிரை வந்தது, அண்ணா!" என்றாள் மல்லி.

கிளிட் ... க்ளாட்... கிளிட் ... க்ளாட்...

சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தார் படுக்கை அறையில் கணினியில் வேலை செய்துகொண்டிருந்த அம்மா.

"ஐயோ மல்லி...! வீட்டுக்குள்ளே எப்படி குதிரை வந்தது?"

"வாலை வீசிக்கிட்டு

 வாசல் வழியா

 வரவேற்பறை வந்து

 நாற்காலிய நொறுக்கி

படிக்கும் அறை போய்

புத்தகத்தைப் புரட்டி

வீட்டுக்குள்ளே குதிரை வந்தது, அம்மா!" என்றாள் மல்லி.

கிளிட் ... க்ளாட்... கிளிட் ... க்ளாட்...

சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தார் சமையல் அறையில் காய்கறி நறுக்கிக்கொண்டிருந்த அப்பா.

"மல்லீ………...! வீட்டுக்குள்ளே எப்படி குதிரை வந்தது?"

"வாலை வீசிக்கிட்டு

வாசல் வழியா

வரவேற்பறை வந்து

 நாற்காலிய நொறுக்கி

படிக்கும் அறை போய்

புத்தகத்தைப் புரட்டி

படுக்கும் அறையில பாஞ்சு

படுக்கையில புரண்டு

வீட்டுக்குள்ளே குதிரை வந்தது, அப்பா!" என்றாள் மல்லி.

கிளிட் ... க்ளாட்... கிளிட் ... க்ளாட்...

சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தார் தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த தாத்தா.

"அச்சோ மல்லி...! வீட்டுக்குள்ளே எப்படி குதிரை வந்தது?"

"வாலை வீசிக்கிட்டு

வாசல் வழியா

வரவேற்பறை வந்து

நாற்காலிய நொறுக்கி

படிக்கும் அறை போய்

புத்தகத்தைப் புரட்டி

படுக்கும் அறையில பாஞ்சு

படுக்கையில புரண்டு

சமையல் அறையில நுழைஞ்சு

சாப்பாடு சாப்பிட்டு

வீட்டுக்குள்ளே குதிரை வந்தது, தாத்தா!" என்றாள் மல்லி.

வாலை வீசிக்கிட்டு _______________

வாசல் வழியா _______________

வரவேற்பறை வந்து _______________

நாற்காலிய நொறுக்கி_______________

புத்தகத்தைப் புரட்டி _______________

படுக்கையில புரண்டு _______________

சாப்பாடு சாப்பிட்டு ______________

வீட்டுக்குள்ளே வந்த குதிரை...

வாலை வீசிக்கிட்டு...

                வாசல் வழியா...

                        வந்த வழியே...

வெளியே போனது!

கிளிட் ... க்ளாட்... கிளிட் ... க்ளாட்...

கிளிட் ... க்ளாட்... க்ளிக்கிட்டி க்ளாட்...


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PIPER (பொதிந்திருக்கும் பவளங்கள்)

ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - V

ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - II