இடுகைகள்

ஜனவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாவாய் ஒப்பந்தம் - I

படம்
  என் திருமணத்திற்கு அடுத்த ஜுலை மாதம் மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது, மூன்று கேஸுகளில் ஷெர்லக் ஹோம்ஸுடன் இணைந்து அவருடைய துப்பறியும் முறைகளை கூடவே இருந்து பார்த்ததில். என்னுடைய நோட்ஸுகளில் இவற்றை ‘இரண்டாம் கறையின் மர்மம்’ , ‘நாவாய் ஒப்பந்தம்’ மற்றும் ‘சோர்ந்து போன கேப்டன்’ என்ற தலைப்புகளின் கீழ் குறித்து வைத்திருந்தேன். இதில் முதல் கேஸ் அரச குடும்பத்தின் பல பேர் சம்பந்தப்பட்டிருப்பதாய் இருப்பதால் இதை பற்றிப் பேசுவதற்கு அடுத்த நூற்றாண்டு வரைக் காத்திருக்க வேண்டும். அந்தக் கேஸில் சம்பந்தப்பட்டவர்கள் ஷெர்லக் ஹோம்ஸின் திறமையைப் பார்த்து வியந்ததற்கு சாட்சியம் போல், அவர் பாரீஸ் போலீசுக்கு அந்தக் கேஸை விளக்கிச் சொல்லியதின் வார்த்தை மாறா ரிப்போர்ட் என்னிடம் இருக்கிறது. ஆனாலும் அதைப் பற்றிப் பேச முடியாததினால், பட்டியலில் அடுத்து இருக்கும் கேஸிற்குப் போகிறேன். இந்தக் கேஸின் கிளையன்ட் என்னுடைய பள்ளித் தோழன் என்பதாலும், தேசத்தின் பாதுகாப்பு குறித்ததாகவும் இருப்பதாலும் இது கொஞ்சம் தனித் தன்மை கொண்டதாகிறது. என்னுடைய பள்ளி நாட்களில் என்னுடன் படித்தவன் பெர்சி பெல்ப்ஸ் (Percy Phelps). என் வயதை ...

யானை டாக்டர் - ஜெயமோகன் (முத்துக் குளிக்க வாரியளா?)

படம்
  வேண்டும் என்று ஆசை ஆசையாய் வாங்கிய புத்தகங்கள் அலமாரியில் பிரிக்கப்படாமலேயே வரிசை கட்டி நிற்க நேர்வது எல்லாப் புத்தகப்பிரியர்களுக்கும் நடக்கும் ஒன்று என்று தோன்றுகிறது. நம்முடைய அலமாரியில், நாமே பார்த்துப் பார்த்து வாங்கிய புத்தகங்களாகவே இருந்தாலும் கூட, அவற்றை வாசிப்பதற்குக் கூட நமக்கென்று ஒரு நேரமும் அந்தப் புத்தகத்திடமிருந்து கிட்டத்தட்ட ஒரு அனுமதியும் கிடைக்கப்பெற வேண்டும். இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கி இரண்டு நாட்கள் முன்பு வரை அந்த நேரமும் அனுமதியும் கிடைக்காமல் இருந்த புத்தகம் 'யானை டாக்டர்'. டாக்டர். கிருஷ்ணமூர்த்தி யைப் பற்றிய எழுத்தாளர் ஜெயமோகனின் கதை என்று ஐந்து வார்த்தைகளிலும் கூட விவரித்து(?) விடலாம் இந்தப் புத்தகத்தை. இந்தச் சிறுகதை முதலில் எப்போது எங்கே வெளிவந்தது என்று தெரிந்துகொள்ள இயலவில்லை. தனி நூலாக தன்னறம் பதிப்பகம் இதை வெளியிட்டுள்ள போதும் என் கைகளில் வந்து சேர்ந்தது இயல்வாகை பதிப்பகத்தின் வெளியீடு. ஒரு புத்தகத்தில் இருக்கும் காப்புரிமை, வெளியான வருடம் ஆகிய வெளியீட்டுத் தகவல்கள் எவற்றையும் காண முடியவில்லை. இப்படிப்பட்ட புத்தகங்களுக்கு ...

நடுநிசியில் ஒரு நெடுஞ்சாலையில் - சிறுகதை தொகுப்பு

படம்
  காடு, காதல், கார், கதை, கிராமம், மரம், மனிதன்… இவைகளைப் பற்றி …  இப்படியெல்லாம் கூட இருக்குமா? இப்படியும் இருந்தால்? விடைகள் கிடைக்குமா உள்ளிருக்கும் பக்கங்களில்? இல்லை மேலும் வினாக்கள் வீசிச்செல்லுமா வார்த்தைகள்? நுழைந்துதான் பாருங்களேன்!  நடுநிசியில் ஒரு நெடுஞ்சாலையில் சிறுகதை தொகுப்பு Paperback on Amazon  நடுநிசியில் ஒரு நெடுஞ்சாலையில் சிறுகதை தொகுப்பு  Kindle edition on Amazon