இடுகைகள்

பிப்ரவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாடஸ்டி ப்ளெய்ஸ் (Modesty Blaise)

படம்
  சூப்பர் ஹீரோக்களும் சூப்பர் ஹீரோயின்களும் நிறைந்திருக்கும் இன்றைய காமிக்ஸ் புத்தக உலகில் மாடஸ்டி பிளெய்சின் தாக்கத்தை உணருவது கொஞ்சம் சிரமமானது தான். ஆனால் 1980களில் அன்றைய காமிக்ஸ் உலகில் வலம் வந்த 'முகமூடி மாயாவி', 'மந்திரவாதி மாண்ட்ரேக்', ' இரும்புக்கை மாயாவி' ஆகிய ஹீரோக்களுக்கு நடுவே, எந்த வித மந்திரமும் மாயாஜாலமும் இல்லாமல், தன் புத்தி கூர்மையும், தற்காப்புக் கலையும், வயதிற்கு மீறிய கிரிமினல் அனுபவமும், ஏராளமான சொத்தும், எந்தக் காலத்திலும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கப்படாதக் கொள்கைகளும், ஆயிரம் முறை கூட நம்பி தன் உயிரை ஒப்படைக்கும் நம்பிக்கையுள்ள பார்ட்னரும் கொண்ட இளம் பெண் மாடஸ்டி ப்ளெய்சின் (Modesty Blaise) வருகை ஏற்படுத்தியத் தாக்கத்தின் அளவு - மாடஸ்டியின் சாகசங்களை தமிழ் காமிக்ஸுகளில் வாசித்து வளர்ந்த தமிழர் ஒருவர் பிற்காலத்தில் தன் மகளுக்கு 'மாடஸ்டி'  என்று பெயர் சூட்டும் அளவு. மாடஸ்டியின் பிறப்பு: மாடஸ்டிக்கு இரண்டு பிறப்புகள் உண்டு. ஒன்று - 'மாடஸ்டி' என்ற கதாபாத்திரத்தின் பிறப்பு. மற்றொன்று - 'மாடஸ்டி' என்ற காமிக் ஸ்ட்ரிப்...

நாவாய் ஒப்பந்தம் - VII

படம்
  காஃபியைக் குடித்து உணவையும் உண்டு இருக்கையில் அமர்ந்த ஹோம்ஸ் நடந்தததை விளக்க ஆரம்பித்தார். "உங்கள் இருவரையும் ரயிலில் ஏற்றி அனுப்பிவிட்டு அப்படியேக் காலாற நடந்து சர்ரேயின் (Surrey) காட்சிகளை ரசித்துக்கொண்டே மாலை தேநீருக்கு ரிப்ளி (Ripley) கிராமத்தில் ஒரு அழகான சிறிய உணவகத்தை சென்றடைந்தேன். அங்கேயே சற்று நேரம் தங்கிவிட்டு மறக்காமல் சில சான்ட்விச்சுக்களையும் கொஞ்சம் தேநீரையும் எடுத்துக்கொண்டு வோக்கிங்கிற்கு அந்தி சாயும் வேளையில் வந்து சேர்ந்தேன். ப்ரையர்ப்ரே வீட்டின் அருகில் வந்த சேர்ந்ததும் அந்த சாலையில், அது அதிக போக்குவரத்து இல்லாத சாலையாக இருந்தாலும், நடமாட்டம் குறைவதற்குக் காத்திருந்தேன். யாரும் இல்லை என்று உறுதிப்படுத்தியதும் வேலியைத் தாண்டி உள்ளேக் குதித்தேன்". "கேட் திறந்து தானே இருந்திருக்கும், மிஸ்டர். ஹோம்ஸ்! நீங்கள் ஏறிக் குதிக்க வேண்டிய அவசியமில்லையே!" என்றான் பெர்சி. "இந்த மாதிரி விஷயங்களில் எனக்கு குறிப்பிட்ட எண்ணங்கள் சில உண்டு, மிஸ்டர். பெல்ப்ஸ். மூன்று தேவதாரு மரங்கள் ஒன்றாய் நிற்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து அதன் பின் இருக்கும் இடத்தில் நான் வ...

நாவாய் ஒப்பந்தம் - VI

படம்
  ஹோம்ஸின் இந்த முடிவைப் பற்றி பெர்சியும் நானும் ரயிலில் லண்டன் திரும்பும் போது பேசிக்கொண்டு சென்றோம். எவ்வளவு பேசியும் அவருடைய முடிவிற்குத் திருப்திகரமானக் காரணத்தை எங்களால் யோசிக்கமுடியவில்லை. "நேற்றைய திருட்டு முயற்சிக்கு ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதாவென்று பார்க்க விரும்புகிறாரோ என்னவோ", என்றான் பெர்சி. "என்னைப் பொறுத்தவரை அது ஒரு சாதாரண திருட்டு முயற்சியாய் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை". "வேறு என்னவாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய்?" "என் உடல் நிலை சரியில்லாததால் என் மன நிலையும் பலஹீனமாகிவிட்டதாக நீ நினைத்தாலும் பரவாயில்லை, வாட்சன். ஆனால் என்னைச் சுற்றி ஏதோ ஒரு பயங்கர சதி நடப்பதாக நினைக்கிறேன். என்ன காரணத்தாலோ என்னவோ, என் உயிரைக் குறி வைக்கிறார்கள் சதிகாரர்கள். நடந்தவற்றை நினைத்துப் பார், வாட்சன். விலை மதிப்புள்ள எந்தப் பொருட்களும் இருப்பதற்கு வாய்ப்பில்லாத என்னுடைய படுக்கை அறையில் நுழைய அந்தத் திருடன் ஏன் முயற்சிக்க வேண்டும்? அதுவும் கையில் கத்தியுடன்?" "அவன் கையில் இருந்தது கத்தி தான் என்று உறுதியாகத் தெரியுமா? கதவைத் திறக்க பயன...

நாவாய் ஒப்பந்தம் - V

படம்
அதே போலவே மறு நாள் நாங்கள் வோக்கிங் சென்றோம். ஒரு செவ்விந்தியனைப் போன்று முகத்தில் எந்தப் பாவனையும் இல்லாமல் அவர் பயணம் செய்ததால் அவருடைய முகத்தைப் பார்த்து என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை கேஸ் எந்தத் திசையில் போய்க்கொண்டிருக்கிறதென்று. ஆனால் ரயிலில் அவர் அல்ஃபோன்ஸ்  பெர்ட்டிலான் (Alphonse Bertillon) எனும் ஃபிரெஞ்சுக்காரர் கண்டுபிடித்த மனிதர்களின் உடல் கூறுகளையும் அங்க அளவுகளையும் கொண்டு அவர்களை வகைப்படுத்தும் குறியீடைப் பற்றி  மிகவும் ஆர்வமாகப் பேசிக்கொண்டு வந்ததாக ஞாபகம். மிஸ். ஹாரிசானின் கவனிப்பிலேயே இன்னமும் இருந்த பெர்சி அன்று நாங்கள் பார்த்ததை விட சற்றுத் தெளிவாக இருந்தான். எங்களை பார்த்ததும் சிரமமின்றி எழுந்து எங்களை வரவேற்றான். "ஏதேனும் செய்தி உண்டா?" என்று ஆர்வமாய் கேட்டான். "எதுவும் இருக்காது என்று நான் சொல்லிச் சென்றது போல் செய்தி எதுவும் இல்லை, மிஸ்டர். பெல்ப்ஸ்", என்றார் ஹோம்ஸ். "ஃபோர்ப்ஸையும்  உங்கள் மாமாவையும் பார்த்தேன். மேலும் ஒன்றிரண்டு விசாரணைகளையும் முடுக்கி விட்டிருக்கிறேன். இவற்றிலிருந்து ஏதேனும் கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம்". ...