'போகுமிடம் வெகு தூரமில்லை' - திரை விமர்சனம்

திரையரங்கிற்குச் சென்றுத் திரைப்படம் பார்த்து வெகுநாட்களாகிவிட்ட நிலையில் நேற்று 'போகுமிடம் வெகு தூரமில்லை' திரைப்படத்தை அது ஏதேனும் ஒரு OTT தளத்தில் வெளியாகும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று விடாமல் திரையரங்கிற்குச் சென்று பார்க்கத் தூண்டியது எதுவென்று யோசித்துப் பார்த்ததில் விடை ஏதும் கிடைக்கவில்லை. ஒருவேளை தற்செயலாய் பார்க்க நேர்ந்த நடிகர் கருணாஸின் பேட்டியாக இருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. காமெடியனாகவும் அதன்பின் அரசியல்வாதியாகவும் அவரைப் பற்றி அறிந்ததுதான். அவரை முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கும் கதை என்னவாக இருக்கும் என்ற ஒரு curiosity 'போகுமிடம் வெகு தூரமில்லை' ட்ரெய்லரைப் பார்க்கத் தூண்டியது. அது கொண்டு நிறுத்திய இடம் திரையரங்கம். இதற்குள் ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துவிட்டிருக்கும் 'போகுமிடம் வெகு தூரமில்லை' திரைப்படத்திற்கு. அதில் அதன் கதையும் தொட்டுக்காட்டப்பட்டிருக்கும். அமரர் ஊர்தி ஓட்டுநர் குமார் (விமல்) தன் மனைவியை பிரசவத்திற்காக தன் செலவுத் தகுதிக்கு மீறிய மருத்துவமனையில் தன் தாத்தாவின் பொறுப்பில் (இருவருக்கும் வேறு யாரும் இல்ல...